கோவை, வடவள்ளி சாலை, 41-வது வார்டுக்கு உட்பட்ட பாப்பநாயக்கன் புதூர் அடுத்த, பை மெட்டல் சாலை ராஜன் நகரில், இன்று அந்த பகுதியில் மயில் ஒன்று இறந்த நிலையில் உள்ளதாக, பகுதி மக்கள் அப்பகுதியின், கவுன்சிலர் சாந்தி சந்திரனிடம் தெரிவித்தனர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாந்தி சந்திரன், இது குறித்து வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். மேலும் அவர்கள் வரும் வரை அங்கேயே காத்திருந்தார். சற்று நேரத்தில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் வந்ததும், உயிரிழந்த மயிலை அவர்களிடம் ஒப்படைத்தார். மேலும், இந்த பகுதியில் மின்சாரம் தாக்கி மயில் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகின்றது.

இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினரிடம் அவர் கேட்டுக் கொண்டார். இந்த மாதத்தில் மட்டும் இது மூன்றாவது மயில் உயிரிழந்துள்ளது. எனவே குடியிருப்பு பகுதிகளுக்குள் அதிகமாக உணவு தேடி வரும் மயில்கள் மின்சார கம்பிகளில் மோதி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே வனப்பகுதியில் முறையாக உணவு கிடைக்கப் செய்ய உணவுகளை ஆங்காங்கே தேடி சாப்பிட வழிவகை செய்ய வேண்டும். மயில்கள், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment