கோவைக்கு வருகை தர உள்ள தமிழக முதல் அமைச்சருக்கு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க சார்பில் மாபெரும் வரவேற்பு.
தி.மு.க ஆட்சி அமைந்து கடந்த ஒரு வருட காலத்தில் , கோவை மாவட்டத்தில் 25,000 பொது மக்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை ஏழை எளிய பொதுமக்களுக்கு வழங்கியும் , 313.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கி சாலைப் பணிகளைத் துவங்கியும், கோவை மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளுக்கு 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கியும், மோப்பிரிபாளையம் பகுதியில் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை அமைக்க நிதி ஒதுக்கியும் , கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கியும்,கோவை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த பலகட்ட பணிகளை மேற்கொண்டு, கோவை மாவட்டத்தை ஒரு தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து நிறைவேற்றி வரும் தமிழக முதலமைச்சர் கோவை வர உள்ளார்.

வருகின்ற 14.07.2022 அன்று மாலை சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வருகை தந்து , 15.07.2022 அன்று காலை கொடிசியாவில் தொழில் முனைவோர்களுடன் சந்திப்பும், 15.07.2022 அன்று மாலை ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் பொள்ளாச்சியில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்திலும் , கோவையில் நடைபெற உள்ள பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

தமிழக முதல் அமைச்சர் வருகையொட்டி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க சார்பில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க சார்பில் அனைத்து தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக்கழக பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு ,பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ,நகரக்கழக, பகுதிக்கழக, ஒன்றியக்கழக, பேரூர்க்கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வட்டக்கழகப் பொறுப்பாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், செயல்வீரர்கள், உடன்பிறப்புகள் உள்ளிட்ட\பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று, பிரமாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வருகின்ற 15.07.2022 அன்று தமிழக முதல் அமைச்சர் தலைமையில் கோவையில் நடைபெற உள்ள பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழகத்தின் அனைத்து தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக்கழக பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ,நகரக்கழக, பகுதிக்கழக, ஒன்றியக்கழக, பேரூர்க்கழகச் செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் , வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் , மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், செயல்வீரர்கள், உடன்பிறப்புகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
Be First to Comment