கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வாலாங்குளம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி வரைபடத்தை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடத்தில் அறிவுறுத்தினார். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா விளக்கி கூறினார்.
மேலும், இந்த ஆய்வின்போது நீர்வழிப் பாதைகளை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து ஆடிஸ் வீதியில் ரூ2.50 கோடி மதிப்பீட்டில் நூலக அறிவுசார் மைய கட்டிட பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து வடவள்ளி ரேவதி நகரில் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா ஆனந்தகுமார், எம்பி சண்முகசுந்தரம், துணைமேயர் வெற்றிச்செல்வன், துணை ஆணையர் சர்மிளா, திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply