Press "Enter" to skip to content

கோவை வ.ஊ.சி பூங்காவில் பதபதைக்க வைக்கும் பாம்பு

வெயில் தாக்கம் அதிகரித்த நிலையில் வ.ஊ.சி பூங்காவில் பறவைகளுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது.
கோடை வெயிலின் தாக்கம் கோவையில் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பறவைகள் நீருக்காக அல்லாடி வருகின்றன.
இதனால் பலரும் அவரவர் வீட்டில் பறவைகளுக்கு நீர் வைத்து வருகின்றனர். அதே சமயம் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பூங்கா, சுற்றுலாத்தளங்கள் ஆகியவை மூடியுள்ள நிலையில் பூங்காக்களில் உள்ள பறவைகள் விலங்குகளை காண யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள பறவைகள் விலங்குகள் கண்காணிக்கப்படுகிறதா என்ற வருத்தமும் பல வன ஆர்வலர்கள், பொது மக்க்ள் பலருக்கும் ஏற்பட்டது. இந்த நிலையில் கோவை உள்ள வஊசி வனவிலங்கு பூங்காவில் உள்ள பறவைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அங்குள்ள பறவைகளுக்கு வெயிலின் தாக்கம் குறைய மதிய வேலையில் நீர் ஊற்றி குளிப்பாட்டப்படுகின்றன.
அதே சமயம் அங்கு கண்ணாடிகள் அறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் நாக பாம்பு ஒன்று படமெடுத்து பார்க்கும் வீடியோ பதபதைக்க வைக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்பது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks