கோவை, ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் சார்பாக ரூபாய் ஒரு கோடி நிதி உதவியினை தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்கு வியாழக்கிழமை அன்று வழங்கப்பட்டது. தமிழக அரசு கொரோனா தடுப்பு பணியினை முனைப்புடன் செய்துவருகிறது. இந்நிலையில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி மற்றும் நிர்வாகி.கே.ஆதித்யா தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்தி இந்த நிதி உதவியினை வழங்கினார்.இந்த காசோலையினை வழங்கும்போது சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.
இந்த நிதி கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
Be First to Comment