கோவை 67 வது வார்டு சித்தாபுதூர் உள்ள சி.எம்.சி காலனியில் பல ஆண்டுகளாக நிலத்தடி நீர் ( உப்புத் தண்ணீர்) வரவில்லை என்ற குறை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து 67வது வார்டு மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதனிடம் புகார் மனு கொடுத்தார்கள். பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நிலத்தடி நீர் பழுது சரி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் வருவதற்கான ஏற்பாட்டினை செய்து கொடுத்த மாமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தனர்.

Be First to Comment