கோவை மாநகராட்சி 96வார்டில் சாலைகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் தூய்மைபணிகள் நடைபெற்றது. இதனை மேற்பார்வையிட்ட 96வது மாமன்ற உறுப்பினர் குண்சேகரன் வார்டில் குப்பைகள் தரம் பிரித்து வீடுகளில் வாங்கப்படுவதையும், சாலைகளில் செடி, கொடிகள், மற்றும் சாக்கடையில் தேங்கியுள்ள குப்பைகள் இருக்கும் பகுதியை பார்வையிட்டார். மேலும் உடனடியாக சாலைகளில் இருக்கும் புதர்மண்டி உள்ள செடிகளையும், சாக்கடைகளில் தேங்கிய குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநகராட்சி அதிகாரிகளிடத்தில் கேட்டு கொண்டார்.


Be First to Comment