நாளை மறுநாள் பெங்களூரில் இருந்து சென்னைக்கு சசிகலா வருகை தரவுள்ளார். இந்த வருகைக்கு பெங்களூரு முதல் சென்னை வரை சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்திட அ.ம.மு.க-வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சசிகலா நாளை மறுநாள் சென்னை வருகை தருவதை முன்னிட்டு 12 இடங்களில் வரவேற்பு அளிக்கவும் பேரணி நடத்தவும் அனுமதி கோரி அ.ம.மு.க நிர்வாகி செந்தமிழன் அளித்த மனுவை சென்னை போலீசார் நிராகரித்துள்ளனர்.

சென்னையில் உரிய அனுமதியின்றி யாரும் கூட்டங்கள் நடத்த கூடாது, பேரணி செல்ல கூடாது அவ்வாறு செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆணை பிறப்பித்திருந்தார்.
சசிகலா வருகையொட்டி கொடுக்கப்பட்ட மனுவை பெற்ற போலீசார், பேரணியில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்? அதன் முழு விபரத்தைனையும் கொடுக்க வேண்டும் என்றும், அந்த விபரங்களை எல்லாம் கொடுத்தால் கூட சட்டபூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து ஆலோசனை செய்தபிறகே, மனு தொடர்பான முடிவெடுக்கப்படும் என சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Be First to Comment