சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக சட்டமன்றத்தில் நேற்று அதிமுகவினர் அமலியில் ஈடுபட்டதுடன், வெளிநடப்பு செய்தனர். இன்னிலையில் இன்றும் சட்டமன்றத்தை புறக்கணித்து அதிமுகவினர் சென்னையில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் காவல்துறையினரால் கைது செய்யபட்டனர். இதனை கண்டித்து, தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் தர்ணா மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடிய அதிமுகவினர் கட்சி கொடியேந்தியபடி ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகே சாலையை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அதிமுக எதிர்கட்சி தலைவர் உள்பட அதிமுகவினரை கைது செய்த காவல்துறையினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதிமுகவினர் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment