ஒவ்வொரு தமிழ் மாதம் தொடங்கிய நாள் முதல் 5 நாட்கள் வரை சபரிமலை ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படுவது வழக்கம். இந்த நாட்களிலும் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய செல்வதுண்டு. கார்த்திகை, மார்கழி மாதங்களைப் போல அதிக கூட்ட நெரிசல் இல்லாமல், மிகவும் குறைந்தளவிலான பக்தர்களே சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
வைகாசி மாதம், மே 15ம் தேதி தொடங்குகிறது. இதனால் மே 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை சபரிமலை சுவாமி தரிசனம் செய்யவும், மாத பூஜைக்காகவும் நடை திறந்திருக்கும்.

இதையொட்டி மே 14ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மே 15ம் தேதி அதிகாலை முதல் மே 19ம் தேதி இரவு பூஜை நடக்கும் வரை நடை திறந்திருக்கும். ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கான ஆன்லைன் முன்பதிவு https://sabarimalaonline.org என்ற சபரிமலை தேவஸ்தான நிர்வாகத்தால் நடத்தப்படும் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த முன்பதிவு தொடங்கியுள்ளது.
Be First to Comment