எல்.சி இந்தியா என்று அழைக்கப்படும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு சமூக நலன் சார்ந்த பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 150 கிளை அமைப்புகளுடன்,சுமார் 1800 உறுப்பினர்களைக் கொண்டு பெண்கள் அமைப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதன் கீழ் செயல்பட்டு வரும் கோயம்புத்தூர் பென்டா( Penta) லேடீஸ் சர்க்கிள் 37,மற்றும் கௌமாரம் பிரசாந்தி அகாடமி இணைந்து கோவை அவினாசி சாலை சுகுணா மண்டபத்தில் நடைபெற்று வரும், கோ கிளாம் கண்காட்சி அரங்கில் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது.முழுக்க சமுதாய சேவை சிந்தனையுடன் துவங்கப்பட்டுள்ளது.

இது குறித்து,கோயம்புத்தூர் பென்டா லேடீஸ் சர்க்கிள் 37 இன் தலைவர் சர்க்கிளர் சீத்தள் போவனி,மற்றும் துணை தலைவர் சர்க்கிளர் காதம்பரி ஆகியோர் பேசினர். கோவை மற்றும் புற நகர் பகுதிகளில்,சமுதாய சேவை செய்யும் நோக்கத்தில் இந்த அமைப்பு செயல்படுவதாகவும்,குறிப்பாக,சமுகத்தில் பின்தங்கிய ஏழை குடும்பத்தினருக்கு கல்வி,மருத்துவம், போன்ற தேவைகளுக்கு உதவிகள் செய்வது, அரசு பள்ளியில் சேதமடைந்த வகுப்பு கட்டிங்களை கட்டி கொடுப்பது, இளம் தலைமுறை மாணவ,மாணவிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது,மரங்கள் நடுவது என சமுதாயம் சார்ந்த பணிகளை செய்து வருவதாக தெரிவித்தனர்..இந்த ஸ்டால் வாயிலாக கிடைக்கும் இலாபத்தை ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக பயன்படுத்துவதாக தெரிவித்தனர்…
Be First to Comment