Press "Enter" to skip to content

சர்வதேச வளரி கூட்டமைப்பினர் தேசிய அளவில் போட்டிகள் நடத்த ஆலோசனை

பழமையான தற்காப்பு கலையான வளரி கலையை மீட்கும் விதமாக தேசிய அளவிலான வளரி கூட்டமைப்பு செயல்பட்டு வருகின்றது. தேசிய வளரி மற்றும் இந்தியன் வளரி கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் இணைய வழியாக நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இதில்,செயலாளர் சந்தோஷ் குமார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா,கேரளா,கர்நாடகா,ஒடிசா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வளரி கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாநில மாவட்ட உறுப்பினர்களின் அறிமுகம் நடைபெற்றது. இதில் தேசிய அளவில் வளரி போட்டிகள் நடத்துவது, அழிந்து வரும் வளரி கலையை மீட்கும் விதமாக இன்றைய தலைமுறையினருக்கு வளரி குறித்து பயிற்சி கொடுப்பது, மாநில மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துவது, நடுவர்களுக்கான கருத்தரங்குகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில மாவட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks