கோவை மாநகராட்சி 27வது வார்டு துரைசாமி லே-அவுட் குடிசைப்பகுதி, ஜெகநாதபுரம், வெற்றிலைக்காரர் வீதி ஆகிய பகுதிகளில் சாக்கடை நீர் தேங்கி இருந்தது. இதை அதிகாரிகள் கவனத்திற்கு 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் கொண்டு சென்றார். மேலும் அவர் அதனை விரைவில் சுத்தம் செய்திட கேட்டுக்கொண்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மேற்பார்வையில் சாக்கடை சுத்தம் செய்யப்பட்டு கழிவுகளை உடனடியாக ஆட்டோ மூலம் அகற்றினர். துரிதமாக பணிகள் நடைபெற்றதை மக்கள் வரவேற்றனர்.

Be First to Comment