கோவை ராமநாதபுரத்தில் இயங்கி வரும் திருச்சி ரோடு கிளை இந்தியன் வங்கி ஏ.டி.எம் செண்டரில் ஏ.டி.எம் எந்திரத்தில் வங்கி ஊழியர்கள் பணத்தை டெபாசிட் செய்யும் எந்திரத்தின் கதவு திறக்கப்பட்டு அந்த எந்திரத்தின் சாவி அதே எந்திரத்தில் கொத்தாக தொங்கவிட்டு சென்றுவிட்டனர். மேலும் இந்த இந்தியன் வங்கி கிளையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வரும்போது ஏ.டி.எம் எந்திரத்தில் சாவிக்கொத்து தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கியில் கோவை திருச்சி ரோடு கிளை மேலாளர் உடனடி நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த ஏ.டி.எம் சென்டரில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் சிலர் தலைக்கவசம் அணிந்தபடியே ஏ.டி.எம் சென்டரில் சென்று வருகின்றனர்.
தற்போது உள்ள சூழ்நிலையில் பல இடங்களில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை அள்ளி செல்வதும், அதேசமயம் ஏ.டி.எம் எந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்று விடுவதும் பல செய்திகளில் பார்த்துள்ளோம். திருட வரும் திருடனுக்கு கஷ்டப்பட்டு ஏ.டி.எம் சென்டரை உடைக்க வேண்டாம். சாவிக்கொத்து இந்த எந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் திருடர்கள் முறைப்படி சாவியை உபயோகப்படுத்தி ஏ.டி.எம் செண்டரில் பணத்தை களவாடி செல்லலாம் என கூறுகிறதோ என பொதுமக்கள் தெரிவித்து கருதுகிறார்கள். இதுகுறித்து இந்தியன் வங்கி திருச்சி ரோடு கிளை மேலாளர் உடனடி நடவடிக்கை எடுப்பாரா ?

சாவிகொத்துடன் ஏ.டி.எம். மக்கள் அதிர்ச்சி
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment