போக்குவரத்து சிக்னலில் நின்று பொதுமக்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என திருநங்கைகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை, அறிவுறுத்தல்கள் விடுத்துள்ளனர்.
கோவையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் போது அங்கு வரும் திருநங்கைகள் அவர்களிடம் பணம் கேட்கின்றனர்.
அவ்வாறு வாகன ஓட்டிகள் பணம் கொடுக்க மறுத்தால், சில திருநங்கைகள் அவர்களை தரக்குறைவாக பேசுவதும், ஆபாச செய்கைகள் செய்வதும் தொடர்கதையாகி வந்துள்ளது.
இதே போல இரவில் பாலியல் தொந்தரவு ரீதியான செயல்களிலும் திருநங்கைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகரில் பல சிக்னல்களில் திருநங்கைகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபட கூடாது என கோவை ஆர்.எஸ். புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருநங்கைகளை அழைத்து காவல் ஆய்வாளர் ஆனந்த் ஜோதி தலைமையில் ஆலோசனை வழங்கப்பட்டது.
தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபட்டால் சம்மந்தப்பட்ட திருநங்கைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை, மற்றும் அறிவுரைகள் வழங்கினார்கள்.
Leave a Reply