கோவை அவினாசி சாலை லட்சுமி மில் சிக்னல் பகுதியில் எச்டிஎஃப்சி வங்கி பரிவர்த்தன் எஞ்சின்ஆஃப் (Engine Off) பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. கோவையில் உள்ள 6 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் காற்றுமாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது .

ஒரு சிறு தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும். இந்த நாடகத்தில் பரபரப்பான போக்குவரத்து சந்திப்புகளில் தங்கள் வாகனங்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகள், சிக்னல் பச்சை நிறமாக மாறும் வரை காத்திருக்கும்போது, அவர்களின் இன்ஜின்களை அணைக்க ஊக்குவிக்கப்படுவார்கள். வங்கி இந்த நாடகத்தை இந்தியாவில் 40 நகரங்களில் உள்ள 126 பரபரப்பான சிக்னல்களில் நடத்துகிறது.

இந்த விழிப்புணர்வு நாடகம் கோவை லட்சுமி மில்ஸ் சிக்னலில் தொடங்கியது. கோவை கிழக்கு போக்குவரத்துதுறை இன்ஸ்பெக்டர் கோவிந்த் ராஜ் , ரேஸ் கோர்ஸ் போக்குவரத்து துறை சப்இன்ஸ்பெக்டர் முத்துக்குமார்,எச்டிஎஃப்சி வங்கியின் கோவை மண்டல மேலாளர் ராமசந்திரன் கந்தன், க்ளஸ்டர்ஹெட் சிவராமன் மற்றும் போக்குவரத்து துறை காவல் அதிகாரிகள் தேவசேனாதிபதி, ராபர்ட் ஆகியோர் உடன் இருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
Be First to Comment