கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் நீதித்துறை விருந்தினர் மாளிகை திறப்பு விழாவிற்கு தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் பெரிய கடைவீதி திமுக இளைஞர் அணி சார்பில், பழனிவேல் தியாகராஜனை வரவேற்று கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம், கோட்டைமேடு போன்ற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் “சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும் நரிகளுக்கும் என்னடா வேல…?” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டரானது தற்பொழுது மக்களை திரும்பி பார்க்க செய்துள்ளது. இது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
Be First to Comment