கோவை ஒத்தக்கால்மண்டபம் தனியார் மருத்துவமனையில் இருநது கோவை நோக்கி வந்த ஆம்புலன்ஸ் ஈச்சனாரி பாலம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக தடுப்பு சுவர் மீது மோதியது.


இதில் ஆம்புலன்ஸில் வந்த நோய்வாய்ப்பட்ட ராஜேஸ்வரி என்ற 60 வயதிற்கு மேற்பட்ட பெண் அவரது கணவர், மகன் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸில் வந்த நான்கு பேரும் படுகாயம் அடைந்துள்ளது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Be First to Comment