கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சாதி பாகுபாடு கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு வர்ண முறைகள் என்ற தலைப்பில், சாதிய வேறுபாடுகளை கற்பித்தும், சூத்திரர்கள்,பஞ்சமர்கள் எனவும் பிளவுபடுத்தி பாடம் கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடை கற்பிப்பதற்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதைதொடர்ந்து, இன்று சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சாதி பாகுபாடு கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வர்ணாசிரமம் பாடம் இடம்பெற்று இருக்கும் பாடப்பிரிவை கிழித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாதி வேறுபாடுகளை கற்பிக்கும், சூத்திரர்கள்,பஞ்சமர்கள் என இழிவுபடுத்தும் மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவ்வமைப்பினர் 15க்கும் மேற்பட்டவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த போலீசார் கைது செய்தனர்
Be First to Comment