Press "Enter" to skip to content

சிறுவர்களை திருத்திய காவல்துறை உதவி ஆய்வாளர்

கோவை சுந்தராபுரத்தை அடுத்த எல்.ஐ.சி பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கிய பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் அதே இடத்தில் கடுமையாக சண்டை போட்டிருக்கிறார்கள்.
பெரிய மனிதர்களைப் போல மிகக் கடுமையான வார்த்தைகளை பேசியபடி சண்டை போடுவதை கவனித்த போத்தனூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் அந்த சிறுவர்களை அழைத்து விசாரித்து இருக்கிறார்.

அவர்கள் சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்ட அந்த அதிகாரி, ”இந்த வயதிலேயே உங்களுக்குள் இவ்வளவு கோபமும் ஆத்திரமும் இருந்தால் எப்படி உயர்வான நிலைக்கு வருவீர்கள்?” என்று கேட்டிருக்கிறார்.

”நீங்கள் இரண்டு பேரும் சண்டை போடாமல் எப்போதும் நண்பர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் பெற்றோர்களை அழைத்து வாருங்கள் நான் பேசுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.


ஒரு மணி நேரத்துக்கு மேலாக அங்கேயே தனியாக இருந்த அந்த இரண்டு பேரும் அவர்களுக்குள் பேசி சமரசம் ஆகிவிட்டார்கள். கட்டிப்பிடித்தபடியே போலீஸ் அதிகாரி முன் வந்து நின்ற அந்த சிறுவர்கள் ”இனி நாங்கள் சண்டையே போட மாட்டோம் சார். எப்பவும் ஒற்றுமையா இருப்போம்” என்று சொன்னதும் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் அந்த இரண்டு சிறுவர்களுக்கும் அறிவுரைகள் சொல்லி அனுப்பியிருக்கிறார்.

இப்போதும்கூட வழியில் தன்னை பார்த்தால் அந்த சிறுவர்கள் வணக்கம் சொல்லுவது மனதுக்கு சந்தோஷத்தை தருகிறது என்று கூறும் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரத்தை பலரும் பாராட்டுகின்றனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks