கோவை சிறுவாணி அணை மற்றும் நண்டங்கரை தடுப்பணையை தமிழக வனத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நல்லூர் வயல் கிராமத்தில் அமைந்துள்ள நண்டங்கரை அணையை தமிழக வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். தடுப்பணை தூர் வாரும் பணியை சிறுதுளி அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. அதன் பணியை கேட்டறிந்தவர், அங்கு உள்ள கிராவல் மண் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து, கோவையின் பிரதான குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, பேட்டியின்போது அவர் கூறுகையில்;-
காருண்யாவில், பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை திறந்து வைத்ததாகவும், தொடர்ந்து நண்டங்கரை தடுப்பணையை ஆய்வு மேற்கொண்டதாக கூறியவர், நண்டங்கரை தடுப்பணை தூர்வாரும் பொழுது எடுத்த மண்களை எடுப்பதில் பிரச்சினை இருந்ததாக கூறினர், தற்போது, அந்த மண்ணை விவசாயிகள் பயன்படுத்தவும், அவர்கள் பட்டா சிட்டா காண்பித்து எடுத்து பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்வராயபுரம், ஆலாந்துறை, பூலுவப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் தலா 15 நாட்களுக்கு எடுத்துக்கொள்ளவும் கூறியுள்ளதாக தெரிவித்தவர், சிறுவாணி அணையில் இருந்து கோவை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. 50 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 25 அடி நீர் கொள்ளளவு உள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கோவை தி.மு.க மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Be First to Comment