சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று வேப்பிலை, துளசி, மஞ்சள்பொடி, வில்வம்,விபூதி வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று குறையும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகருக்கு வெகு அருகில் உள்ள புகழ்பெற்ற ஆலயம் சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளும், பிற நாடுகளிலும் கோவில்கள் பல இருந்தாலும், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் சிறிது வேறுபட்டதாகும்.
ஆண்டவர் கோவிலில் உள்ள உத்தரவுப் பெட்டி தான் சிறப்புக்கு காரணம். சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படும் பொருளைப் பொறுத்து தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் அதன் தாக்கம் இருக்கும் என்பது இன்று வரை நிரூபிக்கப்பட்டு வருகிறது.
இப்பெட்டியில் வைக்கப்படும் பொருளானது, தமிழ்நாட்டிலுள்ள ஏதாவது ஒரு ஊரிலுள்ள பக்தர் ஒருவரின் கனவில் முருகன் அருளாசியால் தோன்றும் பொருள் வைக்கப்படும். கனவில் பொருள் வரும் பக்தருக்கு, இப்படி ஒரு கோவில் உள்ளது என்பதே தெரியாது. அப்படிப்பட்டவரின் கனவில் வரும் பொருள் தான் ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படும் மேலும் அந்தக் கனவு உண்மை தானா என்பதை இக்கோவிலில் பூ போட்டு பார்த்த பின்பே, கனவில் தோன்றிய பொருள் ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைத்து தினந்தோறும் பூஜிக்கப்பட்டு வரும்.
பக்தர்களின் கனவில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்தன.

உத்தரவு பெட்டியில் தண்ணீர் வைத்து பூஜை செய்த போது நாட்டில் எப்போதுமே வராத சுனாமி வந்தது. அதே போல இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்த போல சசிகலா உட்பட பல அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்த நாக்ந்ந்ஸ்வரி என்ற பெண் பக்தரின் கனவில் உத்தரவானது. கடந்த ஏப்ரல் 23ந் தேதி குங்குமம் வைத்து பூஜை செய்யப்பட்டது, தற்போது அதனை எடுத்துவிட்டு இன்று முதல் வேப்பிலை, துளசி, மஞ்சள்பொடி, வில்வம்,விபூதி ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால் வைரஸ் தொற்று படிப்படியாக குறையும் என்று நம்பப்படுகிறது.
Be First to Comment