கர்நாடக மாநிலம் சிவமொக்கா தாலுகா அப்பலகெரே கிராமம் அருகே ஹுனசூரு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் அருகே ரெயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது.
அந்த கல்குவாரிக்கு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி ரெயில்வே கிரசர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். தற்போதைய நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கேட்டறிந்து வருவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
சிவமொக்கா விபத்திற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பாரபட்சமற்ற நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் மூத்த நீதிபதி ஒருவர் சம்பவ இடத்திற்கு இன்று காலை விரைந்து சேத விவரங்களை ஆய்வு செய்தார்
Be First to Comment