கட்டுமான துறையில் உள்ள அனைத்து நிலை சார்ந்த தொழில் அதிபர்களும் பெறும் விதமாக நாட்டிலேயே முதன்முறையாக சி.என்.ஐ.எனப்படும் கட்டுமானம் தொடர்பான பரிந்துரை அமைப்பு செயல்பட்டு வருகிறது.
கட்டுமானதுறையில் சாதிக்க விரும்பும் புதிய தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் விதமாக துவங்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் புதிய உறுப்பினர்கள் அதிகமாக சேர்ந்து வரும் நிலையில் புதிய சாப்டர்களும் துவங்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சி.என்.ஐ.யின் மூன்றாவது சாப்டராக கோயமுத்தூர் கேலக்ஸி துவக்க விழா கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
சி.என்.ஐ.யின் நிறுவன தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இதில், கோவை மண்டல வழிகாட்டு நிர்வாகி லிங்குராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அரிமா சங்கத்தின் முன்னால் தலைவர் சண்முகம் மற்றும் சகாரா புராஜெக்டின் செயலாளர் அர்ஜூன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் சி.என்.ஐ.கோயமுத்தூர் சாப்டர் கேலக்ஸியின் தலைமை செயல் அதிகாரி பிரசன்னராஜ்,செயலாளர் அதுல்யா,எம்.டி.சி.பிரகலாநாதன் மற்றும் நிர்வாகிளுக்கு வரவேற்பு பேட்ஜ் வழங்கி கவிரவிக்கப்பட்டனர். முன்னதாக இதில் புதிய உறுப்பினர்களுக்கு கட்டுமானம் துறை தொடர்பான பரிந்துரை பயிற்சிகள் வழங்கப்பட்டது.

சி.என்.ஐ.எனப்படும் கட்டுமானம் தொடர்பான பரிந்துரை அமைப்பு
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment