நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை வ.உ.சி மைதானத்தில் நடக்கும் விழாவிற்காக பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை, கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

நாட்டின் 75 வது சுதந்திர தின விழா வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பான முறையில் சுதந்திர தின நிகழ்ச்சி நடக்க இருக்கின்றன. கலெக்டர் சமீரன் விழாவுக்கு தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். அதை தொடர்ந்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, என்சிசி மாணவர்கள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்கிறார்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பொது மக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

விழாவுக்கான மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.
இதனிடையே வரும் 13ஆம் தேதி வ.உ.சி மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட உள்ளனர். மாநகரில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர். மாவட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்ச்சி கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி மைதானத்தில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஒத்திகை செய்தனர்.
Be First to Comment