75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு – கோவை டவுன் ஹால் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் காந்தி, நேரு, பாரதமாதா வேடமணிந்து பேரணி.
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை டவுன் ஹால் பகுதியில் இருந்து உக்கடம் வரை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பேரணி மேற்கொண்டனர்.

கோவை மாநகர் மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் இந்த பேரணி மேற்கொள்ளப்பட்டது. இதில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பாரதமாதா வேடமணிந்து தேசிய கொடி ஏந்தியையும் பாரதியார், சுபாஷ் சந்திரபோஸ் படங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியும் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சுதந்திர தினம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணி நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
Be First to Comment