நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டுதேசிய கொடி ஏற்றுதல்,த.மு.மு.க சார்பாக இரத்ததான முகாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோவை மத்திய மாவட்டம் சார்பாக,கோவையில் பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து இரத்ததான முகாம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
தமுமுக மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக. கோவை துணைமேயர் வெற்றிச்செல்வன், கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, ம.ம.க மாநில பொருளாளர் உமர், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான இ.அஹமது கபீர் முன்னிலையில்

மாநில செயற்குழு உறுப்பினர்கள் சாகுல் அமீது, ஜெம் பாபு , மாநில பிரதிநிதி அக்பர், தமுமுக மாவட்ட செயலாளர் முஜீபுர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட துணைத்தலைவர் சிராஜ்தீன், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் அமீது,
ஆசிக் அஹமது, தலைமை கழக பேச்சாளர் ரெக்ஸ் ரபி, சமூகநீதி மாணவர் இயக்கம் துணைச் செயலாளர் அம்ஜத் அலிகான், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மைதீன், மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் சபியுல்லா, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அபு, முகமது ஆசிக், நசீர், சபீர் அலி, நன்றி உரை ஜியா, மற்றும் முன்னாள் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

இதில்,மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், ஜமாத்தார்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ரத்த தானம் வழங்கினார்கள்.
Be First to Comment