இன்று தைப்பூசம் திருவிழாவினை முன்னிட்டு முருகப்பெருமான் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை கோவில்களில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் பரவசத்துடன் முருகனை வழிபட்டு வருகின்றனர்.


நமது குறிச்சி பகுதியிலும் தைப்பூச திருவிழா பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் சேர்மன் செங்கப்பக்கோனார் குடும்பத்தினர் சார்பில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள செங்கப்பகோனார் திருமண மண்டபத்தில் தைப்பூச திருவிழா மற்றும் அன்னதானம் நடைபெற்றது. அன்னதான விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மருதாலசத்தின் மகள் மனோன்மணி ”தைப்பூச திருவிழா அன்னதானத்தினை நாங்கள் மூன்று தலைமுறைகளாக நடத்தி வருகிறோம், எனது தாத்தா சேர்மன் செங்கப்பகோனார் துவங்கி வைத்ததை, எனது தந்தை மாச்சம்பாளையம் தர்மகர்த்தா மருதாசலம் அவர்களால் தொடர்ந்து, தற்போது எனது தம்பி பிரகாஷ் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆன்மிக பணியினை அடுத்த தலைமுறையும் தொடர்வார்கள்” என கூறினார்.
Be First to Comment