கோவையில் கொரானாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உறவினர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் மோதல். 7 பேர்மீது வழக்கு பதிவு.
கோவை மாவட்டம் பொள்ளாட்சியை சேர்ந்த ஆறுச்சாமி இவர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை சுந்திராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுவந்த நிலையில் கடந்த மே, மாதம் 29 ஆம் தேதி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஆறுச்சாமியின் உறவினர்களிடம் உடலை ஓப்படைத்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் சந்தேகம் இருபதாககூறி, உயிரிழந்த ஆறுச்சாமியின் உறவினர்கள் 7 பேர் மருத்துவமனைக்கு வந்து, மருத்துவரிடம் சந்தேகங்களை கேட்டுள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு மருத்துவரிடம் இருந்த செல்போனை பிடிங்கி கீழேபோட்டு உடைத்தும், மருத்துவரை கீழேதள்ளிட்டு வெளியே ஓடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனை ஊழியர்கள் துரத்திப்பிடித்து தாக்கியுள்ளனர். அந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து, போத்தனூர் காவல்துறையினர் உயிரிழந்த ஆறுச்சாமியின் உறவினர்கள் 7 பேர்மீது வழக்கு பதிவுசெய்து தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment