சூலூரை சேர்ந்த 5 சிறுவர்கள் தடகளப் போட்டியில் தமிழ்நாடு அளவில் தேர்வாகி உள்ளனர். அவர்களை பாராட்டி சூலூர் எஸ்.ஆர்.எஸ் அறக்கட்டளை சார்பாக அவர்கள் மேலும் விளையாட்டில் சிறந்து விளங்க விளையாட்டு உபகரணங்கள் ரூ.7,500 மதிப்பில் வழங்கப்பட்டது. இந்த ஐந்து சிறுவர்களை பயிற்சியளித்து உருவாக்கி வரும் விளையாட்டு பயிற்சியாளர்கள் கணேசன் மற்றும் அருண்குமாருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் சூலூரில் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத இரண்டு மாணவிகளுக்கு 10,000ரூபாயினை எஸ்.ஆர்.எஸ் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது மற்றும் சூலூரை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் தமிழ்நாடு அணிக்கு தேர்ந்தெடுக்கபட்டு அவர் டெல்லியில் பங்கேற்கவுள்ள கால்பந்து போட்டிக்கு உண்டான போக்குவரத்து செலவு ரூ.5,000 எஸ்.ஆர்.எஸ் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.

Be First to Comment