கோவை செட்டிபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட உள்ள தனியார் தார் உற்பத்தி ஆலையை மூட கோரி கிராம மக்கள் விவசாயிகள் ஆலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை செட்டிபாளையம் அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் தனியார் தார் உற்பத்தி ஆலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆலை அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முறையான அனுமதியும், இப்பகுதி மக்களிடம் ஆலோசனை கூட்டமும் எதுவும் நடக்காமல் ஆலையின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பொதுமக்களின் குடியிருப்புக்கு அருகே தார் உற்பத்தி ஆலை செயல்பட்டால் அதனால் வெளியேறும் கழிவுகளால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பகுதியில் தார் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து மதுக்கரை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஆலை நிர்வாகத்தினர் தங்கள் பணிகளை துவங்க உள்ளன. மேலும் இதுகுறித்து கேட்டால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஆலையில் பணியாற்றும் வடமாநில காவலாளிகளை வைத்து மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
உடனடியாக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தனியார் உற்பத்தி ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவ்வாலையின் முன்பு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடி ஆலையை முற்றுகையிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செட்டிபாளையம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் தொடர்ந்து அரசு அதிகாரிகளை வர வலியுறுத்தி இதே பகுதியில் பொதுமக்கள் கூடியதால் வருவாய் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து ஆலை நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

செட்டிபாளையத்தி தனியார் தார் உற்பத்தி ஆலையை மூட கோரி கிராம மக்கள் முற்றுகை
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment