கோவை மாவட்டம் சங்கனூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். Interior design ஆன இவர் கைகளால் தொடாமலும் சென்சார் இல்லாமலும் நம் எடையின் மூலம் தண்ணீர் வெளியேறும் எளிமையான சிறுநீர் கழிவறை மாதிரியை வடிவமைத்துள்ளார்.
கொரொனா காலகட்டத்தில் மக்கள் பலரும் பொது கழிவறைகளை பயன்படுத்தும் தண்ணீர் குழாய்களை திறந்து விட அருவருப்பு பட்டு கொண்டு தண்ணீரை திறந்து விடாமல் சென்று விடுகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது.

இதற்கு மாற்றாக சென்சார்கள் பொருத்தப்பட்ட கழிவறைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதன் விலையானது உயர்வாக உள்ளது. இந்நிலையில் முருகேசன் வடிவமைத்துள்ள இந்த சிறுநீர் கழிவறை ஆனது குறைந்த செலவிலும் கைகளால் எதனையும் தொடாமல் தண்ணீரை வெளியேற்றி கழிவறையை சுத்தம் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவர் வடிவமைத்துள்ள இந்த கழிவறை மேடையின் கீழ் தண்ணீர் வெளியேறுவதற்கான அமுக்கும் வகையிலான வால்வு வைக்கப்பட்டுள்ளது. இதில் நாம் ஏறி நிற்கும் பொழுது அழுத்தத்தின் காரணமாக வால்வு அமுங்கப்பட்டு கழிவறை பேசனில் தண்ணீர் வெளியேறும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் எதையும் தொடுவதற்கு தேவையில்லை அதேசமயம் அதிக செலவு ஆகும் சென்சார்களும் இதற்கு தேவையில்லை.
இதுகுறித்து பேசிய அவர் இதில் 5 சிறப்பம்சங்கள் உள்ளதாக குறிபிட்டார்.
- இந்த கழிவறையில் எதனையும் தொடுவதற்கு அவசியமில்லை.
- குறைந்த செலவு.
- அதுவாகவே சுத்தம் செய்து கொள்ளும்.
- வெளியேறும் தண்ணீரின் அளவை நாமாகவே கட்டுப்படுத்தலாம்.
- பராமரிப்பு செலவு குறைவு.
போன்ற 5 சிறப்பம்சங்கள் உள்ளதாகவும் இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து மாநகராட்சி பொது இடங்களிலும் பள்ளிகள் போன்ற இடங்களில் நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். கொரோனா காலத்தில் இது மிகவும் உதவியாக இருக்கும் எனவும் கூறினார்.
Be First to Comment