திருப்பூரின் பெருமிதங்களில் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த பள்ளி நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாகும். 1932 ம் ஆண்டில் 12 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது இந்த பள்ளி. திருப்பூரின் தொழில் வளர்ச்சியில் முன்னிலையில் நிற்கும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பெரும்பாலானோர் இந்த பள்ளியில் படித்தவர்கள்.
“தி சென்னை சில்க்ஸ்” ”தங்கம் ஜீவல்லரி”, ”குமரன் ஜூவல்லரி” ஆகிய குழுமங்களின் சகோதரர்கள் இந்த பள்ளியில் படித்தத்தவர்கள்தான். கடந்த 22-3-2022 அவர்கள் அனைவரும் தாங்கள் படித்த வகுப்பறைகளில் அமர்ந்து தங்கள் நினைவுகளை தலைமையாசிரியர் பழனிச்சாமி அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். தங்கள் மலரும் நினைவுகளுடன் பள்ளியை சுற்றிப்பார்த்தனர்.
”எந்த ஒரு பொருட்செல்வமும் தந்தீராத ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாகவும், மனதில் நிறைந்த வரலாற்று நிகழ்வாகவும் இருந்தது இந்த நிகழ்ச்சி” என உணர்ச்சி ததும்ப மகிழ்ச்சியாய் கூறினர் அந்த பள்ளியில் படித்த அன்றைய மற்றும் இன்றைய மாணவர்கள்.

Be First to Comment