தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் சமுதாய கடமையை நிறைவேற்றும் பணியில் ”தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஶ்ரீ குமரன் தங்க மாளிகை” நிறுவனம் வாடிக்கையாளர்கள் வாங்கும் துணி ரகங்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணி பையை கொடுப்பதற்கான அறிமுகம் செய்யும் விழா நடைபெற்றது. இதில் மேலாண்மை இயக்குநர் மாணிக்கம் முன்னிலையில் மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் தனி உதவியாளர் (நிலம்) பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். கோவை ஒப்பணக்கார வீதி கிளையில் துணி பையை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இந்த நிகழ்ச்சியில் கிளை மேலாளர்கள் ராமகிருஷ்ணன், பாலமுருகன், பி.ஆர்.ஓ சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன், உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், சுகாதார மண்டல அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் குமரேசன் மற்றும் தி சென்னை சில்க்ஸ் மேலாளர்கள் கலந்து கொண்டனர்
Be First to Comment