சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முன்பக்கம் உள்ள மூன்று டவர் பிளாக்குகளுக்கு பின்புறமாக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்வதற்காகப் பல கட்டடங்கள் இருக்கின்றது. அங்குள்ள கல்லீரல் சிகிச்சைக்கான கட்டடத்தில் மொத்தம் மூன்று தளங்கள் இருக்கின்றன. இந்த கட்டடத்தின் தரைதளத்தில், இன்று காலை வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கின்றது.
இதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.தகவலறிந்து 4 வாகனங்களில் நிகழ்விடத்திற்கு வந்த கீழ்ப்பாக்கம், பிராட்வே தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் நோயாளிகள், பொதுமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

விசாரணையில், தீப்பற்றி எரிந்த குடோன் ஆக்சிஜன் சிலிண்டர், முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் வைக்க பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. மேலும், விபத்திற்கு காரணம் மின் கசிவு என தெரியவந்துள்ளது.
20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். தற்போதைய நிலையில் தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான பணியாகவே இருந்துவந்ததாக சொல்லப்படுகிறது. தீயைக் முழுவதுமாக கட்டுப்படுத்திய பிறகு தான் இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவரும்.
Be First to Comment