மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக 200க்கும் மேற்பட்டோர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மனு.
கோவை மாநகராட்சியில் சொத்து உயர்வை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் சொத்து வரி உயர்த்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய சூழலில் சொத்து வரி உயர்வு தொடர்பாக பொதுமக்கள் இம்மாதம் 13-ஆம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று கோவை மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி, அனைத்துப் பகுதிகளிலும் சொத்து வரியை உயர்த்த கூடாது என மனு கொடுக்கும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது.
இதன் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமைக் குழு உறுப்பினர் பத்மநாபன் தலைமையிலான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் இன்று மாநகராட்சி அலுவலகம் வந்தனர்.
தொடர்ந்து மாநகராட்சி வருவாய்த்துறை உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினத்திடம் தங்களது மனுக்களை ஒவ்வொருவராக அளித்தனர்.
Be First to Comment