கோவை கணபதி காந்தி நகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி இவர் தனியார் வங்கியில் தனது அண்ணன் கடன் வாங்கி இறந்த நிலையில் தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றி ஜப்தி செய்து தனியார் வங்கி என மிரட்டுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார் இவர் அளித்துள்ள மனுவில் சுமார் 60 வருடங்களாக அவரது மூன்று சகோதரர்கள் மற்றும் விஜயலட்சுமி ஆகிய நானும் அப்பாவும் அம்மாவும் வசித்து வந்ததாகவும் இந்நிலையில் நான்கு வருடங்களுக்கு முன்பு மூன்று சகோதரர்களும் மற்றும் தனது அம்மாவும் இறந்து விட்ட நிலையில் தற்போது தனியார் வங்கியில் இருந்து வந்து மறைந்த தனது அண்ணன் சிவதாஸ் வாங்கிய 75 லட்சம் கடனை திருப்பி செலுத்தாததால் தன்னையும் தனது அப்பாவையும் வீட்டிலிருந்து வெளியேற்றி வீட்டை பூட்டி, சென்றுவிட்டதாகவும் மேலும் இதுகுறித்து கேட்டபோது எனது அண்ணன் சிவதாஸ் எங்கள் வீட்டின் அருகில் உள்ள 15 சென்ட் இடத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி இருப்பதாக தெரிவித்து எங்களை மிகவும் கேவலப்படுத்தும் வகையில் பேசினர் இதற்கு அருகில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவரும் உடந்தையாக அச்சுறுத்தும் வகையில் மிரட்டினார். இப்பொழுது எனது அப்பாவையும் எங்கயோ கூட்டிச் சென்று விட்டனர் அதனால் எனக்கும் என் அப்பாவுக்கும் எனது உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பு தந்து எங்களை வீட்டிலேயே தங்க வைக்க அனுமதி வாங்கித் தருமாறு அவர் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்

சொத்தை மீட்டு, பாதுகாப்பு தருமாறும் மாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment