கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் அதிகமானதால் தொழில் நிறுவனங்கள் முடங்கி வருகிறது சுமார் ஒரு லட்சம் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
கோவை மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஆட்டோமொபைல்ஸ், பவுண்டரி, பம்ப், வெட்கிரைண்டர் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகமாக இருக்கிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் அடுக்குமாடி மேம்பால பணிகள் நடக்கிறது இதில் சுமார் 2 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
கொரோனா நோய் இரண்டாம் அலையாக உச்சத்தை எட்டியது கடந்த ஆண்டிலிருந்து உச்ச அளவை தாண்டி பாதிப்பு கூடி வருவதால் வெளி மாநில தொழிலாளா்கள் பாதிப்பு கூடி வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கோவை வந்து தொழில் நிறுவன வளாகங்கள் மற்றும் வீடுகளில் தங்கி வேலை செய்த தொழிலாளர்கள் சுமார் ஒரு லட்சம் போ் சொந்த ஊர் சென்றுவிட்டனர்.

கடந்த இரு வாரங்களில் மட்டும் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர்.
மேலும் பல ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பெரும்பாலான கம்பெனிகள் கொரோனா நோய்கள் பரவல் காரணமாக முடங்கிப் போய்விடும் நிலை இருப்பதாக தொழில்துறையினர் புலம்பி வருகின்றனர்.
Be First to Comment