ஜவுளித்தொழில் இக்கட்டான சூழலில் உள்ளது. பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் ஒரு கண்டி பஞ்சு ரூ.45 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது ஒரு கண்டி ரூ.95 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அயல் நாட்டு நிறுவனங்களும், பெரிய ஜின்னிங் பேக்டரிகளும், வியாபாரிகள் பதுக்கி வைத்திருப்பதே இதற்கு காரணம். என்றனர்.
இப்படி விலை அதிகமாக உள்ள பருத்தியில் தயாராகும் நூலை இங்குள்ள சிறு குறு நிறுவனங்கள் வாங்கி ஆடை தயாரிக்க முடியாது. இதனால் ஜவுளித் தொழில்கள் முடங்கும் நிலை ஏற்படும். மேலும், வேலை இழப்பு ஏற்படும்.
பருத்தி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால், சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். எனவே யாரிடம் எவ்வளவு பருத்தி உள்ளது என்பதை வெளிப்படையாக ஜவுளித்துறையிடம் தெர்விக்க வேண்டும்.
Be First to Comment