ருச்சி மாநகரம் கே.கே.நகரில் உள்ள கார் பழுது நீக்கும் மைய உரிமையாளர் வினோத். இவர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், சீமான் ஆகியோரை அவதூறாக விமர்சனம் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து வினோத்தின் கார் பழுது நீக்கும் நிலையத்திற்கு சென்று சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் அவரை மிரட்டியதாக திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார்.
இவர் மீது பிரிவு 148 – கலகம் செய்யும்போது பயங்கரமான ஆயுதங்களை பயன்படுத்துதல், பிரிவு 447 – அத்துமீறி நுழைதல், பிரிவு 147 – கலகம் செய்தல், 294(பி) – பிறருக்குத் தொல்லை தரும் விதமாக மோசமாக பேசுவது, 506 (1) – மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது போக முன்னாள் முதல்வர் கருணாநிதியை தவறாக பேசிய வழக்கும் உள்ளது.

இவருடன் நாம் தமிழர் கட்சியின் வினோத், சந்தோஷ், சரவணன் ஆகியோர் கடந்த 11ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் மீது பல்வேறு மாவட்டங்களில் மேலும் வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.
அதே நேரத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜியை மணல் கடத்தலோடு தொடர்பு படுத்தி அவதூறாக பேசியதாக கரூர் மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி கொடுத்த புகாரில் கரூர் போலீசார் பதிவு செய்த வழக்கில் சாட்டை துரைமுருகன் மட்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு, லால்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு மாவட்டங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளதால், இவர் இப்போதைக்கு பெயில் பெற வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.
Be First to Comment