மேற்கு மலை தொடர்ச்சி பகுதியான நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதியில் பல்வேறு விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக யானைகள் என்பது சற்று அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த யானைகள் மலை பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்கள் மற்றும் ஊருக்குள் புகுந்து அடிக்கடி உணவுக்காக சேட்டைகள் செய்து வருவதும்,யானை -மனிதன் மோதலும் என்பது வாடிக்கையாகவே உள்ளது.

இதனை தொடர்ந்து, இன்று இரவு கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செல்லும் சாலையில், ஒற்றை யானை சுமார் அரை மணி நேரம் ஜாலியாக நின்று கொன்றிருந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை மலை பகுதிக்குள் விரட்டினர்.இதனையடுத்து போக்குவரத்து சீரடைந்தது. தற்போது யானை சாலையில் நிற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Be First to Comment