கோவை தடாகம் சாலை ஜி.சி.டி கல்லூரியில் நாளை வாக்கு எண்ணிக்கை பணிகளுக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், பொதுமக்கள் வாக்களித்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், கோவை தடாகம் சாலை பகுதியில் உள்ள ஜிசிடி கல்லூரியில், நாளை எண்ணிக்கைக்காக உள்ளது. இந்த நிலையில் ஜி.சி.டி கல்லூரியில், மூன்று முதல் நான்கு அடுக்கு பாதுகாப்பை, காவல்துறையினரும், இராணுவத்தினரும், வழங்கி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரிக்குள் செல்லும் அனைத்து, வேட்பாளர்கள், வாக்கு முகவர்கள், பணியாளர்கள், என அனைவரையும் தணிக்கைக்கு பின்னர் உரிய அனுமதி இருந்தால் மட்டும் கல்லூரி உள்ளே செல்ல அனுமதித்து வருகின்றனர்.

மேலும், கல்லூரி முகப்பு வாயிலில் தற்காலிகமாக தனிக்கை சாவடி, அமைத்து, அனைவருக்கும், சானிட்டைசர் வழங்கிய பின்னர், அவர்களின் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள படுகின்றது இதனைத் தொடர்ந்து அவர்களது அடையாள அட்டைகளை சோதனை செய்த பின்னர் உரிய ஆவணங்கள் வைத்து இருந்தால் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். காவல்துறையினர், முகப்பு வாயிலில், தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட 10 காவல்துறையினர், 5 இரானுவ வீரர்கள், 10 சீறுடையில்லாத காவலர்கள் கண்கானிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு குறித்து, காவல்துறை துறை ஆணையர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு விதிமுறைகள், காவல்துறையின் நடவடிக்கைகளை என அனைத்தையும் தற்போது பார்வையிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment