ஆதினங்களை பல்லக்கில் சுமக்கும் நிகழ்விற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தால் அமைச்சர்கள் நடமாட முடியாது என வன்முறையை தூண்டும் வகையில் பேசிய மன்னார்குடி ஜீயர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவையில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் கோவை காவல் துறை ஆணையர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவில், வன்முறையை தூண்டும் வகையில் பேசிய மன்னார்குடி ஜீயர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மண்டல செயலாளர் ச.சிற்றரசு, மாநில மாணவரணி துணை செயலாளர் மு.ராகுல், மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்செல்வன், மாநகர தலைவர் புலியகுளம் க.வீரமணி, தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் தி.க.வெங்கிடு, மாவட்ட துணை தலைவர் சி.மாரிமுத்து, தமிழ்முரசு, மாணவரணி தமிழ்செல்வன், கிழக்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Be First to Comment