மறைந்த முதலைமைச்சர் ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தாரோ அதே போல் தான் ஆட்சி செய்வேன் என சசிகலா தெரிவித்து இருக்கிறார்.
அ.தி.மு.க-வில் தன் பக்கம் கொண்டு வர பல்வேறு வியூகங்களை வகுத்தும் கைகூடாத நிலையில், சசிகலா தமிழ்நாடு முழுவதும் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார். எந்த பகுதிக்கு செல்கிறாரோ அங்குள்ள தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசியல் பயணம் இப்போது தொடங்கும். அதிமுக என்பது எங்களுடைய கட்சி. அதை கைப்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. தொண்டர்கள் அனைவரும் இருக்கிறார்கள். தொண்டர்களில் இருந்துதான் தலைவர்கள் உருவாகிறார்கள். விரைவில் அரசியல் பயணம் தொடங்கும்.”

”ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தாரே அதேபோன்று ஆட்சி செய்வேன். குறிப்பாக தற்போது சட்டம் ஒழுங்கு மிகவும் சீரழிந்துள்ளது. சென்னை போன்ற இடங்களில் செயின் பறிப்பு அதிகரித்து இருக்கிறது. பெண்கள் 9 மணிக்கு மேல் வெளியில் செல்லவே கஷ்டப்படுகின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது எங்கள் கட்சிக்காரர்கள்கூட காவல் நிலையத்துக்கு செல்ல முடியாது. அந்த அளவுக்கு கட்டுப்பாட்டோடு வைத்திருந்தார்கள். இப்போது திமுக ஆட்சியில் கரைவேட்டி கட்டியவர்கள்தான் காவல் நிலையத்தில் அதிகம் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும்.இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் முதலமைச்சரின் கவனத்துக்கு செல்கிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது கோரிக்கை.” என்றார்
Leave a Reply