Press "Enter" to skip to content

ஜெய்ஹிந்த் பற்றி கருத்துக்கு தி.மு.க ஆதரவு அளிக்கிறதா? காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி?

தி.மு.க கட்சியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈஸ்வரன் சட்டசபையில் ஜெய்ஹிந்த் பற்றி கூறிய கருத்துக்கு தி.மு.க ஆதரவு அளிக்கிறதா என்பதை தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடனடியாக பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என இந்து முன்னணி கட்சியின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்பிரமணியம், சட்டசபையில் தி.மு.க உறுப்பினர் ஈஸ்வரன் கூறிய கருத்திற்கு தி.மு.க-வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து கவர்னரிடம் மனு அளித்துள்ளது. பா.ஜ.க வரும் சட்டசபை கூட்டத்தொடரின் போது ஜெய்ஹிந்த் கோஷத்துடன் செல்வோம் என கூறியிருக்கிறார்கள். ஆனால் தி.மு.க தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் தரப்படாமல் மௌனம் காத்து வருகின்றனர். தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், ஈஸ்வரன் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா? இல்லையா? என்பதை உடனடியாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் மாநில செயலாளர் கிஷோர்குமார், மாவட்ட தலைவர் தசரதன், கோட்ட செயலாளர் சதிஷ், கோட்ட பேச்சாளர் ஆகிருஷ்ணன், ஆறுச்சாமி, மகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks