டாஸ்மாக் பார் டெண்டர் புதிய விதிகளை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஏற்கனவே பார் வைத்திருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும் நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றிதழ் ஏற்கனவே தங்கள் பெற்றுள்ளதாகவும் ஆனால் தங்களுக்கு எந்த ஒரு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, பார் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதங்களில் மூட வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகளை ஒட்டி அமைக்கப்படும் பார்களில் மது அருந்த தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் அனுமதிக்கவில்லை. டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பார்களை நடத்த இந்த சட்டம் அனுமதிக்கவில்லை.

Be First to Comment