கோவை மாதம்பட்டியில் உள்ள தடுப்பூசி மையத்தில் 5 மணிக்கே டோக்கன்கள் பெற்ற பெரும்பாலான பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் தொடர்ந்து பொது மக்கள் தடுப்பூசி செலுத்த அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் மாவட்டத்தில் 12,000 தடுப்பூசிகள் மட்டுமே இன்று கையிருப்பு உள்ளது. இதனால் இன்று பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி போடப்படவில்லை. இந்நிலையில் சிறப்பு மையங்கள் மூலம் முதியோர் இல்லம், மின் ஊழியர்கள், வன ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் 5,150 தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் ஊரக பகுதிகளில் 16 மையங்களில் தலா 6,400 ஊசிகள் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கோவை மாதம்பட்டி அரசுப்பள்ளியில் தடுப்பூசி மையத்தில் நள்ளிரவு 2 மணி முதல் காத்திருந்த மக்களுக்கு அதிகாலை 5 மணிக்கே டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் காலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்து சென்றனர்.
Be First to Comment