கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சுற்று வட்டார பகுதியில் கோவிட் தொற்று அதிக அளவில் காணப்பட்டது. இதனை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முன் கூட்டியே தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.தொடர்ந்து கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாளியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தி வரும் பொதுமக்களை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். ஜி அருண்குமார் நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.

Be First to Comment