பலரது கோரிக்கையை ஏற்று குறிச்சி பகுதி மக்களின் நலன்கருதி இன்று புதிதாக மூன்று தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அருகாமையில் உள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில் குறிச்சி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் காலை 7 மணி முதலே மக்கள் குவிந்தனர்.
இந்த நிலையில் காலை 10.30 மணி வரை பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் மக்கள் கொதிப்படைந்தனர்.
இதுதொர்பாக மருத்துவர் கூறுகையில், பொதுமக்கள் கூட்டமாக வந்திருப்பதாலும், கட்சியினர் தலையீடு இருப்பதாலும் இன்னும் தடுப்பூசி பணி ஆரம்பிக்கவில்லை அதுதான் தாமதத்திற்கு காரணம் என்றார்.
தி.மு.கவினரோ, ”மருத்துவர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார். அவர் அ.தி.மு.க எம்.எல்.ஏ வரும் வரை தடுப்பூசி போட தயாராக இல்லை. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் எங்கள் கட்சிக்கு வேண்டுமென்றே அவப்பெயரை ஏற்படுத்துக்கிறார்” என குமுறினர்.
இதனால் தடுப்பூசி போடும் மையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு சரி செய்து வருகின்றனர்.
Be First to Comment