செட்டிபாளையம் மற்றும் பிச்சனூரில் தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு மருத்து உபகரணங்கள் குறிச்சி பிரபாகரன் வழங்கினார்.
கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட செட்டிபாளையம் பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமை தி.மு.க கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டார்.
அந்த மருத்துவ மையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான முககவசம், சானிடைசர்கள், கொரோனா பாதுகாப்பு மருத்துவ உபகரணங்களை அவர்களுக்கு வழங்கினார். மேலும் மதுக்கரை ஒன்றியம் பிச்சனூர் ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மதுக்கரை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராணிசித்ரா, செட்டிபாளையம் நகர பொறுப்பாளர் ரெங்கசாமி, முன்னாள் பேரூர் கழக செயலாளர் ஆறுகுட்டி, மாவட்டபொறியாளர் அணி அமைப்பாளர் கதிர்வேல், இளைஞரணி நந்து, பன்னீர்செல்வம், ராமசாமி, ஜே.பி, ஜெயபிரகாஷ், முத்து, ராமச்சந்திரன்,காளிமுத்து, வேலுமணி, பரமேஸ்வரி, விஜயகுமார், மயில்சாமி, ராஜ்குமார், சந்தோஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Be First to Comment